பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.

அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர், பாடகர் , இசையமைப்பாளர் என பன்முக திறமை வாய்ந்த ஜிவி. பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார் .

இந்தநிலையில் இந்தப்படத்தின் இரண்டாவது சிங்கிளை நடிகை சினேகா ஆக-2ஆம் தேதி வெளியிடுகிறார்.