நகைச்சுவை நடிகர்களில் சந்தானம் ஹீரோவாக மாறி அந்த ஏரியாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் சூரியும் கூட கதையின் நாயகனாகவும் ஒரு சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருகிறார். இவர்களால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்பும் விதமாக யோகிபாபு பிஸியான காமெடி நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே சமயம் பல இயக்குனர்கள் அவரை மனதில் வைத்து அவர் கதையின் நாயகனாக நடிக்கும் விதமாக கதைகளை உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் சில செலக்ட்டிவான படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. அப்படி அவர் நடித்த மண்டேலா படம் சமீபத்தில் இரண்டு தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது லோக்கல் சரக்கு என்கிற படத்தில் நடிக்கிறார் யோகிபாபு. இவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் தினேஷும் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் எஸ்.பி ராஜ்குமார் இயக்குகிறார்.

விஜய் நடித்த சுறா படத்தை இயக்கியது இவர் தான். அதுமட்டுமல்ல வடிவேலு படங்களில் பல ஹிட் காமெடிகளை எழுதியதும் இவர் தான் என்பதால், லோக்கல் சரக்கு காமெடிக்கு பஞ்சம் இல்லாத பாரின் சரக்காக உருவாகும் என எதிர்பார்க்கலாம்.