தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய திரையுலகமே அடுத்து ஆவலாக எதிர்பார்த்து காத்திருப்பது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன். படத்தின் முதல் பாகத்தை தான் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் வாசகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஒன்று. அதிக வாசகர்களால் படிக்கப்பட்ட நாவலும் இதுதான். கிட்டத்தட்ட 50 வருட காலமாக இந்த நாவலுக்கு திரை வடிவம் கொடுக்க முயற்சிகள் நடைபெற்று தற்போது இயக்குனர் மணிரத்னம் அதை சாதித்து காட்டியுள்ளார்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இந்தப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பே துவங்கி படிப்படியாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் வரும் ஜூலை 31ஆம் தேதி ஞாயிறு அன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி என்கிற பாடல் வெளியீட்டு விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற இருக்கிறது.

இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என இந்த படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி அழைப்பு விடுக்கும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.