சமீபத்தில் மாதவன் இயக்கி நடித்து வெளியான படம் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட். இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருந்தது.

இந்திய தேச தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக கூறி தேச துரோக குற்றம் சாட்டப்பட்டு கைதான நம்பி நாராயணன் பல போராட்டங்களை சந்தித்து தான் குற்றம் அற்றவன் என நிரூபித்து அந்த வழக்கில் வெற்றி கண்டார்.

இதை மையப்படுத்தி வெளியான இந்த படத்தில் நடித்திருந்த மாதவன், நம்பி நாராயணனின் பிரதிபலிப்பாகவே படம் முழுவதும் தன்னை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் இந்த கதையின் நிஜ நாயகனான நம்பி நாராயணன் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின

இந்த படம் வெளியான சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படம் குறித்து கூறும்போது இன்றைய இளைஞர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது என்று பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
