பெரும்பாலும் குற்றம் நடந்த இடங்களில் அதுகுறித்து துப்பு துலக்குதலில் காவல்துறைக்கு உதவியாக இருப்பது பாரன்சிக் எனப்படுகின்ற தடயவியல் துறை தான். மிக சிக்கலான வழக்குகளிலும் கூட பாரன்சிக் உதவியுடன் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். அப்படி ஒரு துறையை மையப்படுத்தி தமிழில் பெரிய அளவில் படங்கள் வெளியானது இல்லை.

அந்த குறையை போக்குமாறு உருவாகியுள்ளது கடாவர் திரைப்படம் இப்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது அது உறுதிதான் என்பது தெரிகிறது. இதில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார் அது மட்டுமல்ல இந்த படத்தில் பாரன்சிக அதிகாரி ஆகவும் இதில் நடித்துள்ளார்.

மொத்த படத்தியும் அவர்தான் தாங்கி பிடிக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. இந்த படத்தை அனூப் பணிக்கர் என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்த படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.