Home News Kollywood பழைய யுவன் வேண்டுமா ; இயக்குனரை அதிரவைத்த யுவன் சங்கர் ராஜா

பழைய யுவன் வேண்டுமா ; இயக்குனரை அதிரவைத்த யுவன் சங்கர் ராஜா

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு ஆகியோர் நடித்த கோமாளி என்கிற வெற்றி படத்தை இயக்கியவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு தற்போது லவ் டுடே என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

ஆச்சரியமாக இந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் மாறியுள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி அர்ச்சனா ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சாச்சிட்டாளே என்கிற புரோமோ பாடல் வெளியாகி உள்ளது.

வழக்கமாக நெல்சன் அனிருத் ஆகியோர் தங்களது பட பாடல் உருவாக்கத்தை, அதில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்வை வீடியோவாக வெளியிடுவது வழக்கம். அதேபோல இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், யுவன் சங்கர் ராஜாவிடம் பழைய யுவன் வேண்டும் சார் என கேட்க அதற்கு யுவன் சங்கர் ராஜா தனது வீட்டு பெட்டியில் இருந்து பல வருடங்களுக்கு முன் தான் இசையமைத்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொடுக்கிறார். பிரதீப் ரங்கநாதன் அதிர்ந்து போய் இது ரொம்ப பழைய யுவனாக இருக்கிறதே” என்று அசடு வழிவதாக அந்த வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.