தனுஷின் பிறந்தநாளை தொடர்ந்து, அவர் தற்போது நடித்து வரும் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் போஸ்டர்களும் டீசர்களும் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

இதைத்தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 30ஆம் தேதி சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவகர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் மீண்டும் தனுஷ் உடன் கைகோர்த்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

இந்த படத்தில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.