மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அதேபோன்று இன்னொரு பிரம்மாண்ட வெற்றிக்கு தயாராகி வருகிறார் சிம்பு. அந்த விதமாக கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அவர் நடித்து வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
கதாநாயகியாக சித்தி இத்னானி என்பவர் நடிக்க ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் தனது போர்ஷனுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார் சிம்பு. இதைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்து வரும் பத்து தல படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டு நடிக்க துவங்கியுள்ளார்