44ஆவது செஸ் ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடக்க விழா நிகழ்வு நேற்று இரவு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாரத பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு துவங்கி வைத்தனர். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தார். அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் உடன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் இருந்து ஸ்டேடியத்திற்கும் அங்கிருந்து நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டிற்கும் பாதுகாப்பாக அழைத்து வரும் பொறுப்பை நான்கு காவலர்கள் ஏற்று அதை சிறப்பாக செய்து முடித்தனர்.
அவர்களுக்கு மரியாதை செய்து விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களை கௌரவித்து சந்தோஷப்படுத்தியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன