இயக்குனர் தங்கர்பச்சான் உணர்வுபூர்வமான படங்களை இயக்குவதற்கு பெயர் பெற்றவர். தற்போது தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி டக்கு முக்கு டிக்கு தாளம் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது கருமேகங்கள் கலைகின்றன என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் கதையின் நாயகனாக யோகிபாபு நடிக்க நாயகியாக சிவப்பதிகாரம் புகழ் மம்தா மோகன்தாஸ் நடித்து வருகிறார்.
யோகிபாபுவை பொருத்தவரை தர்மபிரபு, கூர்கா, கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் காமெடி கலந்த கதை நாயகனாக நடித்தாலும், மண்டேலா படத்தில் குணச்சித்திர நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். தற்போது தங்கர்பச்சான் கதையின் நாயகனாக நடிப்பதன் மூலம் அவரது நடிப்பு இன்னும் மெருகேறும் என எதிர்பார்க்கலாம்.
இந்த படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கௌதம் மேனன், எஸ்.ஏ..சந்திரசேகர் மற்றும் ஆர்.வி உதயகுமார் உள்ளிட்ட இயக்குனர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.