V4UMEDIA
HomeNewsKollywoodஆகஸ்ட் 3 மதுரையில் நடைபெறும் விருமன் இசை வெளியீட்டு விழா

ஆகஸ்ட் 3 மதுரையில் நடைபெறும் விருமன் இசை வெளியீட்டு விழா

மண் மணம் மாறாத, அதே சமயம் அந்த மண்ணின் மைந்தர்களுக்கே உரிய கோபம், ஆத்திரம், பொறாமை, வீரம் என அவற்றை மையப்படுத்தியே தனது படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர் இயக்குனர் முத்தையா. கொம்பன், மருது உள்ளிட்ட படங்களில் அதை நாம் பார்த்துள்ளோம். குறிப்பாக கொம்பன் படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தியை அவர் காட்டியிருந்தார்.

அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மீண்டும் முத்தையாவும் கார்த்தியும் விருமன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி அறிமுகமாகிறார். இவர்கள் தவிர ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் இவர்கள் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் பின்னணியில் கதை உருவாகியுள்ளதுடன் அந்த பகுதிகளிலேயே படப்பிடிப்பும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட்-3ஆம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி படம் வெளியாக இருப்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments