நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்த வருடம் இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. வரும் ஜூலை-29ஆம் தேதி முதல் துவங்கும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.

இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே மாமல்லபுரத்தில் இந்த போட்டி நடப்பது குறித்து தமிழக அரசு விளம்பரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று (ஜூலை-28) மாலை இதன் துவக்க விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக துவங்கியது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் கலந்து பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் கிளம்பியபோது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இந்த நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் கண்களை கட்டிக்கொண்டு பியானோ வாசித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

கமல் தனது பங்களிப்பாக தமிழரின் பெருமையை தனது குரலால் ஒலித்தார். அதற்கேற்ப நாடக நடிகர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.