ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கியவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். அறிமுகப்படத்திலேயே இளைஞரான இவர் ரசிகர்களை வசப்படுத்தும் விதமாக அந்த படத்தை இயக்கி இருந்தார்.

அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து பெரிய நடிகர் யாராவது ஒருவரின் படத்தை இயக்குனர் என பார்த்தால், அவருக்குள்ள இருந்த நடிகன் வெளிப்பட்டு தற்போது அவரே ஹீரோவாக மாறி தனது படத்தை இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு லவ் டுடே என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இன்று பிரதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் ஒன்றிணைந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 25 வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன லவ் டுடே படத்தின் தலைப்பையே சென்டிமென்டாக தனது படத்திற்கு வைத்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ரவீனா ரவி நடிக்க யோகிபாபு, சத்யராஜ், ராதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்