சிம்பு, ஹன்ஷிகா நடித்த வாலு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய்\சந்தர். அதன்பின் ஸ்கெட்ச், சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கிய விஜய்சந்தர் தற்போது ஃபிலிம் வொர்க்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அவரது முதல் பட கதாநாயகியான ஹன்சிகா தான் இந்தப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்த கூகுள் குட்டப்பன் என்கிற படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான சபரி கிரீசன், சரவணன் இருவரும் இணைந்து இந்தப்படத்தை இயக்குகிறார்கள் சார்பட்டா பரம்பரை படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்த சந்தோஷ் பிரதாப் இந்தப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது இதைத்தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளன.