தனுஷின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் மித்ரன் ஜவஹர். யாரடி நீ மோகினி படத்தில் துவங்கி, குட்டி, உத்தமபுத்திரன் என தனுஷை வைத்து மூன்று படங்களை இவர் இயக்கியுள்ளார். இதில் ஹைலைட் அம்சம் என்னவென்றால் இந்த மூன்று படங்களும் 2கே கிட்ஸ்களுக்கு ரொம்பவே பிடித்த படம் என்பதுதான்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/07/thiru-3.jpg)
இந்த நிலையில் நான்காவது முறையாக தற்போது திருச்சிற்றம்பலம் என்கிற படத்தில் இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நித்யா மேனன். ராசி கண்ணா. மற்றும் பிரியா பவானி சங்கர் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2022/07/thiru-1.jpg)
இந்த படத்தில் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து தனுசுடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் வரும் ஜூலை 29ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.