2020ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான 68வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவுக்கு மொத்தம் பத்து விருதுகள் கிடைத்துள்ளன. இதில் சூரரைப்போற்று படத்துக்கு 5 விருதுகளும் யோகிபாபு நடித்த மண்டேலா படத்திற்கு இரண்டு விருதுகளும் வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும் கிடைத்துள்ளன.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் விமர்சன ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் மிகப்பெரிய வெற்றியை விட்டது. இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்காக சூர்யாவுக்கும் சிறந்த நடிகைக்கான அபர்ணா பாலமுரளிக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.
மேலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சிறந்த படம், சிறந்த திரைக்கதை என ஐந்து விருதுகளை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த படத்தில் இடம்பெற்ற முக்கியமான வசனமான ‘நாம ஜெயிச்சிட்டோம் மாறா’ என்கிற வசனத்துடன் கூறிய கேக்கை வெட்டி தனது குழுவினருடன் கொண்டாடியுள்ளார்னால் இயக்குனர் சுதா கொங்கரா.
தற்போது இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வரும் அக்ஷய் குமாரும் விருது பெற்ற சூரரைப்போற்று கலைஞர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் இப்படி ஒரு படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.