Home News Kollywood தனுஷின் விருந்தோம்பலுக்கு நன்றி ; தி கிரே மேன் இயக்குனர்கள் நெகிழ்ச்சி

தனுஷின் விருந்தோம்பலுக்கு நன்றி ; தி கிரே மேன் இயக்குனர்கள் நெகிழ்ச்சி

தெலுங்கு திரையுலகில் தான் தற்போது லேட்டாக என்ட்ரி கொடுத்துள்ளார் தனுஷ். ஆனால் பாலிவுட், ஹாலிவுட் என ஏற்கனவே தனது கொடியை பறக்க விட்டுவிட்ட தனுஷ், தற்போது மீண்டும் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள தி கிரே மேன் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் மிக முக்கியமான படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளனர். இந்த படம் இன்று நேற்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இதன் வெளியீட்டை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் முகாமிட்டு இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷும் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் நமது தமிழ் பாரம்பரியப்படி வேட்டி சட்டை அணிந்து ஆச்சரியப்படுத்தி இருந்தார் நடிகர் தனுஷ்.

இந்த நிலையில் படத்தின் இயக்குனர்களான ரூஷோ பிரதர்ஸ் கூறும்போது, “அருமையான ஒரு இரவாக அது அமைந்தது. இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்றி. எப்பொழுதுமே இந்தியாவிற்கு வருகை தருவது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. தனுஷின் அருமையான விருந்தோம்பலுக்கு எங்களது பாராட்டுக்கள். நாங்கள் மீண்டும் விரைவில் திரும்பி வருவோம்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.