சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020ல் சூரரைப்போற்று திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 60-வது தேசிய விருது அறிவிப்பில் சூரரைப்போற்று படத்திற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகராக சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப் பெருமையாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் சூர்யாவின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் நாளை அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வித்தியாசமான பரிசு ஒன்றை அறிவித்துள்ளார்.
அதாவது தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்கிற படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது குறித்த தகவல்களும் ஒரு சில புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகின. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் கலைப்புலி தாணு.
இதுகுறித்து அவர் கூறும்போது தேசிய விருது பெற்ற சூர்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக வாடிவாசல் படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் அவர் பயிற்சி பெற்றபோது எடுத்த காட்சிகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் கலைபுலி தாணு.