திரவுபதி, ருத்ர தாண்டவம் என தான் இயக்கிய இரண்டு படங்களின் மூலமும் கவனம் தீர்த்தவர் இயக்குனர் மோகன்.ஜி. அடுத்ததாக தற்போது பகாசுரன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்க, முக்கிய வேடத்தில் நட்டி நட்ராஜ் நடித்துள்ளார்.

இந்த வருடத்தில் வெளியான பீஸ்ட் மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களின் மூலம் தன்னை ஒரு நல்ல நடிகராகவும் வெளிப்படுத்திய செல்வராகவன் இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதியாக ஒரு பாடல் காட்சியை படமாக்கியதுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் மோகன்.ஜி, படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து செல்வராகவனும் “உங்களுடன் பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என்னை மிகவும் அக்கறையாக கவனித்துக் கொண்டதற்கு நன்றி” என்று தன் பங்கிற்கு குறிப்பிட்டுள்ளார்.