Home News Kollywood ராக்கெட்ரி வெற்றியை விஞ்ஞானியுடன் கொண்டாடிய மாதவன்

ராக்கெட்ரி வெற்றியை விஞ்ஞானியுடன் கொண்டாடிய மாதவன்

மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி அனைவராலும் பாராட்டு பெற்ற படம் ராக்கெட்ரி. இந்த படத்தின் மூலம் ஒரு இயக்குனராகவும் மாதவன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படத்தில் நம்பினாராயணன் கதாபாத்திரத்தில் மாதவனே நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நீண்ட நாட்கள் பிறகு நடிகை சிம்ரன் நடித்துள்ளார். சூர்யா இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல விஞ்ஞானி நம்பி நாராயணனும் இறுதிக் காட்சிகள் தோன்றியிருந்தார்

தேச துரோக குற்றம் சாட்டப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு தன்னை நேர்மையானவன் என்று எப்படி நிரூபிக்கிறார் என்பதே இந்த படத்தின் கதை.

உணர்வுப்பூர்வமான படமாக ரசிகர்கள் மனதில் பதிந்து வரவேற்பு பெற்ற இந்த படம் டீசன்டான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை விஞ்ஞானி நம்பி நாராயணனின் வீட்டிற்கே சென்று கேக் வெட்டி அவருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் மாதவன்.  

வரும் ஜூலை 26ம் தேதி முதல் ஓடிடி தளத்திலும் இந்த படம் வெளியாக இருக்கிறது.