இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பி.எஸ் மித்ரன். இதை தொடர்ந்து தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும் மற்றும் இன்னொரு வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன. இந்த படத்தில் கதாநாயகியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கார்த்தி தனது டப்பிங் வேலைகளை தொடங்கியுள்ளார். டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து கார்த்தியும் இயக்குனர் பி.எஸ் மித்திரனும் ஜாலியாக உரையாடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில் கார்த்தி பேசும் வசனம் ஒன்றை நாயகன் கமல் பாணியில் பேசச் சொல்கிறார் மித்ரன். ஆனால் நமக்கு என்ன வருமோ அதை பண்ணினால் சரியாக இருக்கும் என்று கூறுகிறார் கார்த்தி.
அதன் பிறகு நாலு பேருக்கு நல்லது பண்ணினாலும் 40 ஆயிரம் பேருக்கு தெரியிற மாதிரி பண்ணனும் என்று புதிய தத்துவம் ஒன்றை வசனமாக பேசுகிறார் கார்த்தி. இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது என்று ஒரு பழமொழி உண்டு. இது கார்த்தியின் புதுமொழியாக இருக்கிறது.