தமிழ் சினிமாவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நடிகர்களே பாலிவுட், அதையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடி தந்துள்ளனர். அந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ளனர் நடிகர் தனுஷ். தற்போது ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கிரே மேன் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் தனுஷ். படத்தில் இவரது கதாபாத்திரம் நெகட்டிவ் சாயல் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 22ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்தன.

லாஸ்ட் ஏஞ்சல்ஸில் உள்ளிட்ட வெளிநாட்டில் நடைபெற்ற பிரிமியர் நிகழ்ச்சிகளில் கோட் சூட் அணிந்து ஸ்டைலாக கலந்து கொண்ட தனுஷ் இன்று மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் பிரிமியர் நிகழ்ச்சியில் தமிழ் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இங்கே தமிழில் தனுஷ் தனது படம் சம்பந்தமாக கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் வேட்டி சட்டை அணிந்துதான் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.