Home News Kollywood ஹிந்தியில் ரீமேக் ஆகும் தேஜாவு

ஹிந்தியில் ரீமேக் ஆகும் தேஜாவு

அருள்நிதி நடிப்பில் வரும் ஜூலை 22ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் தேஜாவு. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கியுள்ளார். இவர் சினிமா பத்திரிக்கை நிருபராக இருந்து தற்போது இயக்குனராக மாறியுள்ளவர். இந்த படத்தில் மதுபாலா மிக முக்கியமான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க, ரஜினி முருகன், வலிமை படங்களில் நடித்த அச்சியுத் குமார், காளி வெங்கட், ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேலடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரெய்லரரே வித்தியாசமாக இருந்தது. அதை நிரூபிக்கும் விதமாக இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது, ஒரு அறிமுக இயக்குனர் என்று சொல்ல முடியாத வகையில் மிகவும் விறுவிறுப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாகவும் இந்த படத்தை இயக்கியுள்ளார் அரவிந்த் சீனிவாசன்.

அது மட்டுமல்ல சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகளில் தயாரிப்பாளர் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார். நிச்சயமாக இந்திக்கு செல்லும் அளவிற்கு தகுதியான கதை தான் என்பதில் சந்தேகமே இல்லை.