கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக பெரும்பாலான நாட்கள் திரையரங்குகள் மூடியே இருந்தன. அதனால் பல படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகின. அப்படி வெளியான படங்களில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிபெற்ற ஒரு சில படங்களை பார்த்தபோது, “அடடா இந்த படங்களை தியேட்டரில் பார்த்தால் எப்படி இருக்கும்..? அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயிற்றே” என்று ரசிகர்களை உச் கொட்ட வைத்த நிகழ்வுகளும் உண்டு.

அப்படி சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

அதே சமயம் இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி இருக்க வேண்டிய படம் என்கிற உணர்வையும் கொடுத்தன.

அப்படி அந்த படங்களை தியேட்டரில் பார்க்காமல் வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக வரும் ஜூலை 23ஆம் தேதி இந்தப் படங்கள் இரண்டும் பல இடங்களில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கின்றன.

இந்த படங்களை தியேட்டரில் பார்ப்பது நிச்சயம் கூறி அனுபவமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.