V4UMEDIA
HomeNewsKollywoodதுரிதம் பட இயக்குனருக்கு அஜித் பட இயக்குனர் சொன்ன ஆலோசனை

துரிதம் பட இயக்குனருக்கு அஜித் பட இயக்குனர் சொன்ன ஆலோசனை

தமிழ் சினிமாவில் ரோடு மூவி எனப்படும், பெரும்பாலான காட்சிகள் சாலையிலே நடைபெறுவது போல உருவாகும் படங்கள் அவ்வப்போது வருவதுண்டு. அப்படி ஒரு படமாக உருவாகியுள்ளது துரிதம் என்கிற படம். இந்த படத்தை சீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார் இவர் இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டியர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க, கதாநாயகியாக மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் என்பவர் நடித்துள்ளார். இயக்குனர் ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், சமீபத்தில் மறைந்த பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.

இந்த படத்தை முடித்ததும் இயக்குனர் ஹெச்.வினோத்திடம் படத்தை போட்டு காட்டி உள்ளார்கள். படத்தை பார்த்ததும் அவர், படம் நன்றாக வந்திருக்கிறது அதேசமயம் நான் சதுரங்க வேட்டை படம் எடுத்த போது கூட பலதரப்பட்ட கருத்துக்களை சொன்னார்கள். அதன் பிறகு தியேட்டர் சூழ்நிலையில் பொதுமக்களில் மத்தியில் வரும்போது அது மிகவும் பாராட்டப்பட்டது.

அதனால் படம் எப்படி வந்துள்ளது என்கிற கருத்துக்களை தெரிந்துகொள்ள நினைத்தால் பொதுமக்களை அழைத்து தியேட்டரில் திரையிட்டு அவர்களது கருத்தை கேளுங்கள். அதுதான் சரியானதாக இருக்கும் என ஆலோசனை கூறியுள்ளார்.

அதன்படி சென்னையில் வழக்கம்போல நண்பர்களுக்காக சிறப்பு காட்சியை திரையிட்டு காட்டுவதற்கு பதிலாக திருநெல்வேலி ஆலங்குளத்தில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் அந்த பகுதி மக்களை அழைத்து திரையிட்டு காட்டி கருத்து கேட்டுள்ளனர். அந்த மக்களிடம் இருந்து கிடைத்த பாராட்டுக்களில் இன்னும் அதிக நம்பிக்கை பெற்றுள்ளனர் படக்குழுவினர்.

Most Popular

Recent Comments