சந்தானம் நடிப்பில் வரும் ஜூலை 29ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் குலுகுலு. மேயாத மான், ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இதை தொடர்ந்து இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்து டீசர், பாடல்கள் என தற்போது வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் இதன் டீசர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து மாட்னா காலி என்கிற பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் தன் பங்கிற்கு இந்த பாடலை பாராட்டியுள்ளார். இது பற்றிய அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “சந்தோஷ் நாராயணன் பெர்பாமன்ஸ் கலக்கல்.. ஃபன் ஃபன் ஃபன்.. ஏற்கனவே நான் சொன்னது போல ரத்னகுமார்-சந்தானம் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார் அனிருத்.