V4UMEDIA
HomeNewsKollywoodவிஷால் படத்திற்காக 30 வருடத்திற்கு முந்தைய அண்ணா சாலை தயாரானது

விஷால் படத்திற்காக 30 வருடத்திற்கு முந்தைய அண்ணா சாலை தயாரானது

தற்போது லத்தி படத்தில் நடித்து முடித்துவிட்ட விஷால் அடுத்ததாக மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடித்து வருகிறார். சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார்.

இந்த படத்தின் கதை நிகழும் காலகட்டம் தொண்ணூறுகள் என்பதால் அந்த சமயத்தில் சென்னை எப்படி இருந்ததோ அதேபோன்று தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்போது இருந்த அண்ணா சாலையை போன்று மிகப்பெரிய செட் ஒன்றை வடிவமைக்கும் வேலைகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் அந்த செட் அமைக்கும் பணி முடிவடைந்து வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் இந்த செட்டில் விஷால், எஸ்ஜே சூர்யா நடிக்கும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Most Popular

Recent Comments