சின்னத்திரையில் புகழ் பெற்ற நட்சத்திரங்கள் வெள்ளித்திரைக்கு இடம்பெயர்வது ஒன்றும் புதிதான விஷயமில்லை. அந்தவகையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களில் தனது திறமையான பங்களிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரக்சன்.
அதை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மானின் நண்பனாக படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரக்சன். அந்த படத்தில் அவரது காமெடி ரொம்பவே ஒர்க் அவுட்டாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் காமெடி நடிகர்கள் ஹீரோவாகும் வரிசையில் ரக்சனும் இணைந்துள்ளார்.
அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தை ரா.கோ யோகேந்திரன் என்பவர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் கலக்கப்போவது யாரு தீனா விசாகா திமான், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் சச்சின் வாரியர் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
உணர்வுபூர்மான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுது போக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.