தமிழ் சினிமாவில் மற்ற எந்த ஹீரோக்களையும் விட சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பழைய படங்களின் டைட்டில்களை தங்களது படத்திற்கு வைப்பதற்கு இளம் ஹீரோக்கள் ரொம்பவே ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர் பட டைட்டிலை வைத்தாலே தங்களது படம் கிட்டத்தட்ட வெற்றி என்கிற எண்ணம் அவர்கள் மனதில் இருக்கின்றது.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் சில வருடங்களுக்கு முன்பு மோகன் ராஜா இயக்கத்தில் நடித்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேலைக்காரன் பட பட டைட்டிலை மீண்டும் வைத்தனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் இன்னொரு ஹிட் படமான மாவீரன் படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பே டீசர் போன்று ஒரு சண்டைக் காட்சிகளுடன் வெளியிடப்பட்டது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
குறிப்பாக இந்த படத்தில் வழக்கமான சிவகார்த்திகேயன் போல இல்லாமல் பார்ப்பதற்கு தளபதி படத்தில் வரும் ரஜினிகாந்தின் சாயலில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.