V4UMEDIA
HomeNewsKollywoodநடிகராக மாறிய லிங்குசாமியின் வசனகர்த்தா

நடிகராக மாறிய லிங்குசாமியின் வசனகர்த்தா

இயக்குனர் லிங்குசாமியின் டைரக்ஷனில் தெலுங்கு இளம் ஹீரோ ராம் பொத்தினேனி நடிப்பில் வாரியர் என்கிற படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கதாநாயகியாக தெலுங்கு பியூட்டி கிரீத்தி சிட்டி நடிக்க வில்லனாக, ஆதி நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் வசனகர்த்தா பிருந்தா சாரதி நடித்துள்ளார்.

பல வருடங்களாக தனது படங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் பிருந்தா சாரதியை இந்த படத்தில் நம்பிக்கை கொடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார் லிங்குசாமி.

இந்தப் படத்தில் நடித்த கையோடு பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த வரும் வணங்கான் மற்றும் ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் பீச் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் பிருந்தா சாரதி.

இதுபற்றி அவர் கூறும்போது, “இது ஒரு புதிய பாதை.. புதிய பயணம்.. வேறொரு மனிதனாக வாழும் இந்த அனுபவம் நன்றாக தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார்

Most Popular

Recent Comments