செலக்ட்டிவான வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அருள்நிதி. அந்த வகையில் சமீபத்தில் அவர் நடித்த டி பிளாக் என்கிற படம் வெளியானது. இருந்தாலும் ரசிகர்களிடம் பெரிய அளவில் அது வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் அருள்நிதி நடித்துள்ள தேஜாவு என்கிற படம் வரும் ஜூலை 22-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்தப்படத்தை அரவிந்த் சீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பத்திரிகையாளராக பணியாற்றி இயக்குனராக மாறியவர்.
இந்நிலையில் இந்த படத்தின் டீஸரை அருள்நிதியின் சகோதரரான உதயநிதி வெளியிட்டுள்ளார்.. ஒரு நாவலாசிரியர் எழுதும் திகில் கதைகளில் உலாவரும் கதாபாத்திரங்கள் நேரிலேயே வந்து அவரை மிரட்டினால் எப்படி இருக்கும் என்கிற வித்தியாசமான கோணத்தில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
டீசரை பார்க்கும்போதே அது நிச்சயமாக ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பது நன்றாகவே தெரிகிறது.