தமிழ் சினிமா நடிகர்களில் தற்போது பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை வரவேற்பு பெற்றவர் நடிகர் தனுஷ். அந்தவகையில் தற்போது தனுஷ் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள தி கிரே மேன் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரூசோ பிரதர்ஸ் இயக்கியுள்ள இந்த படத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரும் ஜூலை 22ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் பிரீமியர் ஷோ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற்றது. இந்த பிரிமியர் ஷோவில் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா இருவருடன் கலந்து கொண்டார் நடிகர் தனுஷ்.

இந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ் தனது மகனுடன் மகன்களுடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.