பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள மை டியர் பூதம் திரைப்படம் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. , விமல் நடித்த மஞ்சப்பை என்கிற பீல் குட் படத்தை கொடுத்த இயக்குனர் ராகவன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மஞ்சப்பை படத்தில் தாத்தாவுக்கும் பேரனுக்குமான அன்பை சொன்னவர், அடுத்ததாக தான் இயக்கிய கடம்பன் படத்தை ஆக்ஷன் படமாக கொடுத்தார். இந்த இரண்டு படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு குழந்தைகள் உலகத்தை மையப்படுத்தி இந்த மைடியர் பூதம் படத்தை இயக்கியுள்ளார் ராகவன்.
இந்த படம் உருவான விதம் குறித்து ராகவன் கூறும்போது இந்த கதையை எழுதும்போதே பிரபுதேவாவை மனதில் வைத்துதான் எழுதினேன். தயாரிப்பாளரிடம் இந்த கதையை சொன்னதும் அவரும் பிரபுதேவா இதில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
பிரபுதேவாவிடம் இந்த கதையை கூறியதும் அவருக்கும் நடிக்க விருப்பம் இருந்தாலும் இந்த படத்திற்காக மொட்டை போட வேண்டும், அதனால் மற்ற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கும் என்கிற தயக்கமும் இருந்தது. அதே சமயம் டெஸ்ட் ஷூட் எடுத்து பார்த்ததும் பிரபுதேவாவுக்கு கச்சிதமாக அந்த கதாபாத்திரம் பொருந்தியதால் தயக்கத்தை உடைத்து எறிந்து மொட்டை போட்டுக் கொண்டு நடித்தார் பிரபுதேவா.
கிட்டத்தட்ட 45 நாட்கள் அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அதுவரை அவர் எங்குமே வெளியே தலை காட்டவில்லை என்பதுதான் இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்று கூறியுள்ளார் ராகவன்.
கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்த படத்தில், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தில் பிரபுதேவாவுடன் படம் முழுவதும் பயணிக்கும் குழந்தையாக குழந்தை நட்சத்திரம் அஷ்வந்த் . மேலும் படத்தின் இயக்குனர் ராகவனின் மகள் கேசிதாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் நிச்சயமாக குழந்தைகளை கவரும் என்பதில் சந்தேகமே இல்லை.