V4UMEDIA
HomeNewsKollywoodபிசாசு-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிசாசு-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த சில வருடங்களுக்கு முன் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம், வழக்கமான பேய் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு பாசிட்டிவாக எடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது. பிசாசுவாக பிரயாகா மார்ட்டின் நடித்திருந்தார்.

இந்நிலையில் பிசாசு-2 படத்தையும் இயக்க ஆரம்பித்து படத்தை முடித்தும் விட்டார் மிஸ்கின். இந்தப்படத்தில் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்க, .கதாநாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் பூர்ணா ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப்படம் தெலுங்கில் பிசாசி 2 என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது

இந்தநிலையில் இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என மிஸ்கின் அறிவித்துள்ளார். ஹாரர் படங்கள் திரைக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் பிசாசு-2 ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பை நிறைவு பெற செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

Most Popular

Recent Comments