V4UMEDIA
HomeNewsKollywoodமஹா திரைப்படம் இன்னொரு புலன் விசாரணையா ?

மஹா திரைப்படம் இன்னொரு புலன் விசாரணையா ?

ஹன்சிகா நடிப்பில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மஹா திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை நோக்கி நகர்ந்து வருகிறது. சிம்பு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் படம் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

யூ ஆர் ஜமீல் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது இந்த படத்தின் டிரைலர் ஹாலிவுட்டுக்கு இணையாக வந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதேபோல இயக்குனர் ஆர்கே செல்வமணி பேசும்போது இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு புலன் விசாரணை படத்தை ஞாபகப்படுத்தியது என்று கூறியுள்ளார்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது லேட்டாக வந்தாலும் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் விதமாக இந்தப்படம் உருவாகி இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் இந்த படம் ஹன்சிகா நடிக்கும் 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments