வீரமே வாகை சூடும் படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் லத்தி. அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என கடந்த மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் விஷால் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் 8 வயது பையனுக்கு அப்பாவாக ஒரு சராசரி குடும்ப தலைவனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மனைவியாக சுனைனா நடித்துள்ளார். இருப்பினும் இந்த படத்தில் அதிரடியான சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த சண்டை காட்சிகளின்போது விஷால் இரண்டு முறை காயம் அடைந்ததால் படப்பிடிப்பு அவ்வப்போது தள்ளிப்போனது. இதன் காரணமாகவே குறிப்பிட்ட தேதியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என திரையுலக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்ல இந்த படத்தில் விஎப்எக்ஸ் பணிகளும் நிறைய இருப்பதால் இந்த கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது..