இமைக்கா நொடிகள் என்கிற வெற்றிப்படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கோப்ரா. விக்ரம் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்ரமிற்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பிய விக்ரம் நேற்று கோப்ரா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.