V4UMEDIA
HomeNewsKollywoodபுரூஸ்லீ பெண்ணாக மாறினால் ? ; கற்பனைக்கு உயிர் கொடுத்த ராம்கோபால் வர்மா

புரூஸ்லீ பெண்ணாக மாறினால் ? ; கற்பனைக்கு உயிர் கொடுத்த ராம்கோபால் வர்மா

பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது படங்களால் மட்டுமல்ல, தனது சர்ச்சையான கருத்துக்களால் கூட ரசிகர்களிடம் மிக பிரபலமானவர். இன்னொரு பக்கம் அவரது படங்களுக்கும் என தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் அவர் தற்போது இந்தியில் இயக்கியுள்ள லடுக்கி என்கிற படம் பொண்ணு என்கிற பெயரில் தமிழில் வெளியாகிறது.

மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இதில் கதாநாயகியாக பூஜா பலேகர் என்பவர் நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராம்கோபால் வர்மா, “நான் புரூஸ்லீயின் மிக தீவிரமான ரசிகன். அவரது படங்களை பார்த்து வளர்ந்த நான் சினிமாவிற்கு வந்த பின்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை மையமாக வைத்து படங்களை இயக்க நினைத்திருந்தேன். ஆனால் அது தள்ளிப்போனது. இந்த நிலையில் அப்படி ஒரு படத்தை இயக்க முடிவு செய்தபின், புரூஸ்லீ போன்ற ஆணுக்குப் பதிலாக ஒரு பெண்ணை வீராங்கனையாக வைத்து படமாக்கினால் என்ன என்று யோசித்தேன்.

அதற்கான தகுதியான ஒரு நபரை தேடி அலைந்தபோதுதான் பூஜா பலேகர் பற்றி கேள்விப்பட்டு அவரது அசாத்திய திறமையை நேரில் கண்டு வியந்தேன். அவரது வீடியோவை சீனாவில் உள்ள மிகப் பெரிய கம்பெனி ஒன்றில் காட்டியபோது அவர்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அவர்களுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளேன்” என்று கூறியுள்ளார்

Most Popular

Recent Comments