அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி கேம், எண்ட்கேம், போன்ற படங்களை இயக்கிய இயக்குனர்கள் ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் தான் தி கிரே மேன். 1500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் ரையான் காஸ்லிங், கிரிஸ் இவான்ஸ், ஜெஸ்ஸிகா ஹென்விக், அனா டி அர்மாஸ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூலை 22-ம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது இந்த நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் கலந்துகொண்ட நடிகர் தனுஷிடம் இந்த படத்தின் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது என ஹாலிவுட் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த தனுஷ் இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்றே எனக்கு தெரியவில்லை என்று கூற படக்குழுவினரும் பத்திரிக்கையாளர்களும் தனுஷின் நகைச்சுவையால் கலகலவென்று சிரித்தனர்.
இதனை தொடர்ந்து பேசிய தனுஷ், “சென்னையிலுள்ள காஸ்டிங் நிறுவனம் ஒன்று இப்படி ஒரு ஹாலிவுட் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என கேட்டு என்னை அணுகினர். இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நினைத்து நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன் அப்படித்தான் இந்த படத்திற்குள் வந்தேன்” என்று கூறியுள்ளார் தனுஷ்