கனமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளே இருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மற்ற நடிகைகள் பலரும் ஹீரோவுடன் டூயட் பாடிக்கொண்டிருக்க இவரோ கதையின் நாயகியாக தனி ஆளாக கதைக்களத்தில் போராடிக் கொண்டிருப்பார்.

அந்த வகையில் கவனமாக வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது அப்படி நடித்துள்ள ஒரு படம்தான் டிரைவர் ஜமுனா. இந்த படத்தில் கால் டாக்சி டிரைவராக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஏ.ஆர் முருகதாஸின் தம்பி திலீபன் நடித்த வத்திக்குச்சி என்கிற படத்தை இயக்கிய கிங்ஸ்லின் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.