மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனரானவர் ரத்தினகுமார். லோகேஷ் கனகராஜூடன் இணைந்து மாஸ்டர் விக்ரம் உள்ளிட்ட படங்களுக்கு கதாசிரியராகவும் பணியாற்றிய இவர், இன்னொரு பக்கம் சந்தானம் நடித்து வரும் குலுகுலு என்கிற படத்தையும் இயக்கி வந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வரும் ஜூலை 29-ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா சந்திரா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், சாய் தீனா, மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

























