தெலுங்கு இளம் நடிகராக வலம் வருபவர் ராம் பொத்தினேனி. எல்லா தெலுங்கு நடிகர்களும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க விரும்புவது போல, இவருக்கும் அந்த ஆசை வந்ததில் வியப்பில்லை. அந்த வகையில் இயக்குனர் லிங்குசாமி டைரக்சனில் உருவாகியுள்ள வாரியர் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாக இருக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக கிரித்தி ஷெட்டி, நடிக்க வில்லனாக ஆதி நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 14ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் ராம் பொத்தினேனி தமிழ் ஊடகங்களுக்கு தமிழிலேயே பேட்டி கொடுத்து அசத்தி வருகிறார்.
அதுமட்டுமல்ல நடிகர் சிம்புவை தற்போது நேரில் சந்தித்து அவருடன் பேசி மகிழ்ந்து கூடவே தனது நன்றியையும் தெரிவித்துள்ளார் ராம் பொத்தினேனி.
இந்த படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதால் நட்புக்காக இந்த பாடலை சிம்பு பாடிக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..