V4UMEDIA
HomeNewsKollywoodபா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது

பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது

வித்தியாசமான கதைக்களத்துடன் அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் படங்களை இயக்கியவர் இயக்குனர் பா.ரஞ்சித். தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு பெற்றாலும் அவை இரண்டும் ரஜினி படமாகவே தெரிந்தன.

இந்த நிலையில் கடந்த ஆர்யா நடிப்பில், தான் இயக்கிய சார்பட்டா பரம்பரை மூலம், தான் ஹீரோக்களுக்கான இயக்குனரல்ல, கதைகளுக்கான இயக்குனர் தான் என்பதை மீண்டும் நிரூபித்தார் பா.ரஞ்சித்.

இதையடுத்து அவர் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்பட்டாலும், சார்பட்டா படத்தை தொடர்ந்து காதல் கதை ஒன்றைத்தான் படமாக இயக்கப்போவதாக ஏற்கனவே பா.ரஞ்சித் கூறியிருந்தார்.

அந்தவகையில் நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தை இயக்கியுள்ளார் பா.ரஞ்சித். காளிதாஸ் கதாநயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சார்பட்டா படத்தில் நாயகியாக நடித்த துஷாரா நாயகியாக நடிக்கிறார். இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியானது.

Most Popular

Recent Comments