கடந்த 45 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் தனது இசைப்பணியால் ரசிகர்களின் உள்ளங்களை மகிழ்வித்து வரும் மிகப்பெரிய சேவையை செய்து வருகிறார் இளையராஜா. இப்போதும்கூட இளைஞர் போல சுறுசுறுப்பாக படங்களுக்கு இசையமைத்து வருகிறார்
இந்த நிலையில் இளையராஜாவுக்கு நியமன எம்பி வழங்கி கவுரவித்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினியும் கமலும் தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் வெளிபடுத்தி உள்ளனர்.
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதேபோல நடிகர் கமலும், “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்” என தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்..
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஒன்றுக்கு அவரை புகழ்ந்து இளையராஜா முன்னுரை எழுதியதை பலர் விமர்சித்தனர். ஆனால் அவர் தனது நிலையில் உறுதியாக இருப்பதாக கூறி விமர்சித்தவர்களின் வாயை அடைத்தார்.