கடந்த சில சில மாதங்களுக்கு முன்பு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் இருவரும் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. படம் பார்த்தவர்கள் பலரும் பாகுபலி படம் போல இல்லை என்பதை குறிப்பிட்டாலும் இந்த படமும் ஒரு அருமையான படம் என்பதை சொல்ல தவறவில்லை. அந்த அளவிற்கு இந்த படத்தையும் குறைவில்லாமல் கொடுத்திருந்தார் இயக்குனர் ராஜமவுலி. அதே சமயம் இந்த படத்தையும் சோசியல் மீடியாவில் ஒரு சிலர் குறை கூறத்தான் செய்தனர். சமீபத்தில் அப்படி இந்தப் படத்தை குறை கூறி நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவுக்கு ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்கூட்டி தானும் அதை ஆமோதித்து பதிலுக்கு பதிவிட்டு இருந்தது சர்ச்சையை கிளப்பியது.
முனீஸ் என்பவர் சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் இப்போதுதான் ஆர்ஆர்ஆர் என்கிற குப்பையை 30 நிமிடம் பார்த்தேன் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ரசூல் பூக்குட்டி ஓரினச்சேர்க்கையாளர்களின் காதல் கதை என்கிற அர்த்தம் வரும் விதமாக ஆங்கில வார்த்தைகளில் பதிவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இதோடு நில்லாமல், இதை நான் சொல்லவில்லை பொதுவாக பலரும் சொல்லிய கருத்துக்களை ஒட்டித்தான் நான் கூறியிருந்தேன் என்று அதற்கு ஒரு விளக்கமும் அளித்தார் ரசூல் பூக்குட்டி இந்த விளக்கம் இன்னும் ரசிகர்களின் கோபத்தை தூண்டியது.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் ரசூல் பூக்குட்டிக்கு பதிலடி தரும் விதமாக உங்களை ஒருவர் முட்டாள் என்று கூறினால் நாங்களும் அதை வழிமொழிந்து அதேபோல வார்த்தையில் உங்களை அழைத்தால் சரிதான் என ஏற்றுக்கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆஸ்கார் விருது பெற்று ரசிகர்களின் அபிமானத்திற்குரிய ஒரு சவுண்ட் இன்ஜினியர் நமது இந்திய சினிமாவில் பெருமையை உயர்த்தும் விதமாக படம் எடுத்து வரும் ராஜமௌலியின் படத்தை பற்றி இப்படி தரக்குறைவான வார்த்தைகளை பதிவிட்டது ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லை