திரைப்படங்கள் சமூகத்தில் நல்லதொரு தாக்கம் ஏற்படுத்துவது வரவேற்கத்தக்கது. பலர் தங்களது படங்களை மக்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக எதிர்மறையான விளம்பரங்களில் ஈடுபடுவது பல நேரங்களில் சர்ச்சைகளையும் சில நேரங்களில் தேவையில்லாத பின் விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதற்கு முன்பு அப்படி பல நிகழ்வுகள் உண்டு.
அந்தவகையில் பெண் இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கியுள்ள காளி என்கிற டாக்குமென்ட்ரி படத்தின் போஸ்டர் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் காளி புகைப்பிடிப்பது போன்ற அந்த போஸ்டரை வடிவமைத்துள்ளார். பெரும்பாலும் ஆண்கள்தான் இப்படி மக்களின் சமய நம்பிக்கைகளோடு விளையாடுவது வழக்கம்.
ஆனால் பெண் இயக்குனரான லீனா மணிமேகலை இவ்வாறு செய்திருப்பது திரையுலகில் மட்டுமில்லாமல் பொதுவெளியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு சோசியல் மீடியா மூலம் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அது பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத லீனா மணிமேகலை எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதை பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர்தான் என்றால் தரலாம் என தெரிவித்துள்ளார் இந்த விவகாரத்தில் குஷ்பு போன்றவர்கள் லீலா மணிமேகலையின் செயலை கடுமையாக கண்டித்துள்ளனர்.