அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் தற்போது த்ரிஷா நடித்து வரும் படம் ‘தி ரோடு’. இந்த படத்தில் திரிஷா ஒரு ஜர்னலிஸ்ட் மற்றும் குடும்பப்பெண் கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு புரமோஷன் ஆகியுள்ள சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அதேசமயம் சார்பட்டா பரம்பரை படம் மூலம் ரசிகர்களின் மனதில் டான்சிங் ரோஸ் ஆக இடம்பிடித்த சபீர் கல்லரக்கல் இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார். ஒரு நல்ல பெண்ணுக்கும் கெட்ட ஆணுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்தப்படத்தின் கதை.
வில்லனால் திரிஷாவிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட அதன்பிறகு திரிஷாவின் முன் இரண்டு வழிகள் மட்டுமே இருக்கின்றன.. ஒன்று நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் பேசாமல் தன் போக்கில் சென்று கொண்டிருந்தால். கடைசி காலம் வரை எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக வாழ முடியும் என்பது ஒரு வழி.
இல்லை, தனக்கு இறப்பு ஏற்பட்டதற்கு அப்படி ஏற்படுத்தியவனை வஞ்சம் தீர்ப்பது இன்னொரு விதமான வழி. இதில் திரிஷா இதை தேர்ந்தெடுக்கிறார் என்பது தான் உயிரோடு படத்தின் கதை என்கிறார்கள்.