சமீபகாலமாக தமிழில் பிரபலமாக உள்ள விஜய், சிவகார்த்திகேயன், நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே தெலுங்கில் மிகப்பெரிய அளவில் ரசிகர் வட்டமும் வியாபாரம் இருப்பதால் துணிந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அதேசமயம் நடிகர் சந்தானமோ இவர்களைப் போல தெலுங்கு பக்கம் போகாமல் அப்படியே முற்றிலும் மாறாக கன்னட திரையுலகில் நுழைந்து படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார்.

தமிழ் கன்னடம் என இரு மொழிப் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதை அடுத்து படக்குழுவினர் இதை சந்தானத்துடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.