விரிவிருப்பும் வேகமும் கலந்த படங்களை தருவதில் முதலிடத்தில் இருப்பது இயக்குனர் ஹரியின் படங்கள்தான். என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்கு முன்பே அடுத்தடுத்த காட்சிகளில் நம்மை இருக்கையிலேயே கட்டிப்போட்டு வைத்திருக்கும் இயக்குனர் ஹரி.

சாமி 2 படத்திற்கு பிறகு தற்போது அருண்விஜய் கூட்டணியுடன் யானை என்கிற படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்க வருகிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் வழக்கம்போல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

வரும் ஜூலை 1ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இயக்குனர் ஹரியும் அருண்விஜய்யும் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது

இதில் பேசிய இயக்குனர் ஹரி, “சினிமாவை யாராலும் எதுவும் செய்ய முடியாது.. அதே போல தியேட்டரில் படம் பார்க்க வரும் மக்களுக்கு அவர்கள் ரசிக்கும்படியான படத்தைக் கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்பதை சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் எங்களுக்கு யானை பலம் கிடைத்துள்ளது” என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார் ஹரி.















