கடந்த ஜூன் மூன்றாம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கமலுடன் பஹத் பாசில், விஜய்சேதுபதி, காளிதாஸ், நரேன் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருந்த இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக உருவாகி இருந்ததால் தியேட்டர்களில் தற்போதும் வெற்றிகரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது வரை 400 கோடிக்கு மேல் இந்த படம் வசூலித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் படங்களிலேயே இது மிகப்பெரிய வசூல் சாதனை என்பது மட்டுமில்லாமல், தமிழகத்தில் இதுவரை வெளியான படங்களில் அதிகமான வசூலித்த படம் என்று என்கிற பெயரையும் விக்ரம் தட்டிச் சென்றுள்ளது.

தற்போதும் தியேட்டர்களில் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருந்தாலும் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி வரும் ஜூலை 8 ஆம் தேதி முதல் இந்த படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

டிஸ்னி ஹாட்ஸ்டார் இந்த படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளது. ஓடிடியிலும் விக்ரம் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.















